இன்று புதிய வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

புதிய வாக்காளர்கள் மின் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் கடந்த ஜனவரியில் நடந்தது. இதில் புதிய மற்றும் இளம் வாக்காளர்களாக பலரும் விண்ணப்பித் திருந்தனர். இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய வாக்காளர்களாக 43 ஆயிரத்து 960 சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போல் அலைபேசி எண்ணை சேர்ப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 9ஆயிரத்து 530 பேருக்கு தற்போது மின் வாக் காளர் அடையாள அட்டை தயாராக உள்ளது. இதனை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக NVSP இணையதளத்திற்கு செல்ல வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் அல்லது மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அலைபேசிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட வேண்டும். இ-வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை அழுத்த வேண்டும்.

இது குறித்து வழிகாட்ட இன்று (ஞாயிறு) மாவட்டத்தில் உள்ள 533 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. எனவே இந்த முகாம்களில் இ-வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இது வாக்காளர் அடையாளத்திற்கான மாற்று ஆதார ஆவணமாகும். வாக்குப்பதிவின் போது சான்றாக அளிக்கலாம். எனவே புதியதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் இந்த முகாம்களுக்கு சென்று இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்