அனைத்து பொருட்களையும் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேர்தலை நடத்த மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஆண்டிபட்டிக்கு 40 பேரும், பெரிய குளத்திற்கு 41 பேரும், போடிக்கு 35 பேரும், கம்பம் தொகுதிக்கு 39 பேர் என மொத்தம் 155 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல தேர்தல் அலுவலர்களாக வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், கண்காணிப்பாளர்நிலையில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு நடை பெறுவதற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மைங்களுக்கு கொண்டு செல்வதுடன் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு தொடர்பான அனைத்து பொருட்களையும் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி அறிவுறுத்தி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago