தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வான தமிழக அணிக்கு ராமநாதபுரம் சர்வதேச தரத்திலான மைதானத்தில் பயிற்சி அளிக் கப்பட்டது.
ஹாக்கி இந்தியா சார்பில் 11-வது சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹரியானா மாநிலம், நார்வானாவில் மார்ச் 17 முதல் 28-ம் தேதி வரை நடை பெற உள்ளது.
இப்போட்டிக்கான தமிழக ஆண்கள் அணி சென்னையில் தேர்வு செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானத்தில் கடந்த பிப்.17 முதல் மார்ச் 12 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சர்வதேச தரத்தில் ராமநாதபுரம் மைதானம் உள்ளதால் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அணியில் திருச்சியைச் சேர்ந்த சீனிவாசன், மோனிக்கிஷோர், சென்னையைச் சேர்ந்த ஆனந்த், ராமநா தபுரத்தைச் சேர்ந்த வேல்ராகவன், வீரராகவன், கோவையைச் சேர்ந்த நதியரசு, விருதுநகரைச் சேர்ந்த நாக பாரத் உள்ளிட்ட 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக் கட்டளை தங்குமிடம், உணவு வசதிகளை ஏற்பாடு செய்தது.
தமிழக அணியினர் நேற்று சென்னையிலிருந்து ஹரியானா மாநிலத்துக்கு சென்றனர்.
தமிழ்நாடு ஹாக்கி யூனிட் இந்த அணியின் மேலாளராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிழவன் சேதுபதி, தலைமைப் பயிற்சியாளராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய ஹாக்கி பயிற்சி யாளர் எம்.தினேஷ்குமார், துணைப் பயிற்சியாளராக அரியலூரைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை நியமனம் செய் துள்ளது.
இவர்கள் தமிழக அணியினருக்கு பயிற்சி அளித்து ஹரியானா அழைத்துச் செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago