ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளுக்கு எட்டு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் :

By செய்திப்பிரிவு

திகளுக்கு எட்டு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியர் தெரி வித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட னான விழிப்புணர்வுக் குழு கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது:

வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனு அலுவலக வேலைநாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை மார்ச் 20-லும், வேட்புமனு திரும்பப்பெற மார்ச் 22 கடைசி நாளாகும்.

பரமக்குடி (தனி) தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், உத வித்தேர்தல் நடத்தும் அலுவலரான பரமக்குடி வட்டாட்சியரிடம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். திருவாடானை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்திலும் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலு வலரான திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

ராமநாதபுரம் தொகுதிக்கு தேர் தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார் ஆட்சியரிடம் சார் ஆட்சியர் அலுவ லகத்திலும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ராமநாதபுரம் வட்டாட்சியரிடம் வட்டாட்சியர் அலு வலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய் யலாம்.

முதுகுளத்தூர் தொகுதிக்கு தேர் தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலு வலரிடம் மற்றும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியர் ஆகியோரிடமும், முதுகுளத்தூர் வட் டாட்சியர் அலுவலகத்திலேயே இந்த இரு அதிகாரிகளிடமும் மனு தாக்கல் செய்யலாம்.

தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டி யிட இயலாது. ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலும். அதேபோல ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 4 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யலாம். வேட்புமனு பெறும் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் எல்லை வரை தடைசெய்யப்பட்ட பகுதியில் ஒரு வேட்பாளருக்கு 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு பெறும் அறைக்குள் வேட்பாளருடன் 2நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்புமனுவை வேட்பாளரோ அல்லது அவரை முன் மொழிபவரோ தேர்தல் அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் செலவுக் கணக்குகளை பராமரிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்