சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே என்.புதூரில் நடந்த மஞ்சு விரட்டில் 200 காளைகள் பங்கேற்றன.
திருப்புத்தூர் அருகே என்.புதூர் வெள்ளாளங் கருப்பர் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழாவை யொட்டி கடைசி வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடந்து வந்தது. அதன்படி விழா நடக்க இருந்தநிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மஞ்சுவிரட்டுக்குத் தடை விதித்தார். ஆனால் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் நேற்று மஞ்சுவிரட்டு நடக்கும் என தகவல் பரவியதால், பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு வந்தபிறகே காளை உரிமையாளர்களுக்கு மஞ்சுவிரட்டு நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதை யடுத்து காளைகளை கட்டுமாடுகளாக வயல்களில் அவிழ்த்து விட்டனர்.
மேலும் குறைவான பார்வையாளர் களே வந்திருந்தனர். பாரம்பரியம் மாறாமல் இருக்க மாலை 6 மணிக்கு மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து கோயில் காளையை மட்டும் கிராமமக்கள் அவிழ்த்து விட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago