ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பச் செல்லும் வாகனங்களையும் கண்காணிக்க வேண்டும் : தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுரை

By செய்திப்பிரிவு

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பச் செல்லும் வாகனங்களையும் சட்டப் பேரவைத் தொகுதி கண்காணிப்புக் குழு வினர் கண்காணிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் செலவி னப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக்குழு அலு வலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் சவுரவ் துபே (பரமக் குடி, திருவாடானை தொகுதிகள்), மிலன் ரூச்சல் (ராமநாதபுரம், முது குளத்தூர் தொகுதிகள்), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவகாமி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளுக்கும் 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்புக்குழு குழுக்கள், ஒரு தொகுதிக்கு ஒரு வீடியோ கண்காணிப்புக்குழு என 28 கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 50 நேர்வுகளில் ரூ. 50.21 லட்சம் முறையான ஆவணமின்றி கொண்டு சென்றதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1950 என்ற தகவல் தொடர்பு எண்ணுக்கு 1007 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, செலவினப் பார்வை யாளர்கள் பேசும்போது, தற்போது அரசியல் கட்சிகள் சட் டமன்றத் தொகுதி வாரியாக, தங் களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, வேட்பமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அலுவலர்கள் கூடுதல் விழிப்பு டன் பணிபுரிய வேண்டும். எவ்வித பாரபட்சமுமின்றி தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள விதி முறைகளை பின்பற்றி பணியாற்றிட வேண்டும். மேலும் கண்காணிப்புக் குழுவினர் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பச் செல்லும் வாகனங்களையும் கண் காணித்து முறையான ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா எனக் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்