முதுகுளத்தூரில்முகக்கவசம் கட்டாயம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் கரோனா பாதிப்பு மீண்டும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவல் மீண்டும் அதி கரித்து வருவது குறித்து பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசும் எச் சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து முதுகுளத்தூரில் முக்கிய இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. கோயில்கள், வங்கிகள், மருத்து வமனைகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.

முககவசம் அணிவது மட்டுமின்றி, பேரூராட்சியில் ஆரம்பத்தில் கிருமி நாசினி தெளித்ததுபோல மீண்டும் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்