சொந்த தொகுதியிலேயே பணியமர்த்த ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்குவதால் 100 கி.மீ.க்கு பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் தேர்தல் நடக்கவிருக்கும் முந்தைய நாளில்தான் வாக்குச்சாவடி விவரம் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடியை கண்டறிவதில் சிரமம் உள்ளது.

மேலும் பேருந்து வசதியில்லாத குக்கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்வதும், பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதும் சவாலாகவே உள்ளது. பெண்கள் உதவியாக மற்றொருவரை அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. மேலும் தபால் வாக்களிப்பதில் பல்வேறு நடைமுறை இருப்பதால் பலர் வாக்களிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத வாக்களிப்பு நோக்கமே வீணாகிறது.

இதையடுத்து ஆசிரியர்கள் வாக்களிக்க வசதியாக சொந்த தொகுதிக்குள்ளேயே பணியமர்த்த வேண்டும். ஆனால், சொந்த ஒன்றியங் களில் பணியமர்த்தாமல், வேறு ஒன்றி யங்களில் பணியமர்த்தலாம். மேலும் வாக்குச் சாவடிக்குச் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE