ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 21,034 வாக்காளர்கள் விருப்பத்தின்பேரில் தபால் வாக்கு செலுத்தலாம்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சிவகாமி, மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ரா. தெய்வேந்திரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் வி. ரவிச்சந்திரன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர் ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மாவட்டத்தில் 5,76,343 ஆண் வாக்காளர்கள், 5,81,132 பெண் வாக் காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 21,034 பேர் உள்ளனர். இத்தகைய மூத்த குடிமக்கள் நலனுக்காக அவர்களது விருப்பத்தின்பேரில் தபால் வாக்கு செலுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 1647 வாக்குச் சாவடிகள் அமைக் கப்பட உள்ளன. அதில் முதற்கட்டமாக 80 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறி யப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் தேர்தல் பணிகளில் பொது மக்களின் பங்களிப்பை ஊக்குவித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற நிலையை எய்திடும் நோக்கில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் எவ்வித தூண்டுதலுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
1647 மையங்களில் முதற்கட்டமாக 80 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago