தேர்தல் பணிக்கு மாற்று திறனாளிகளை கட்டாயப்படுத்துவதாக புகார் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு மாற்றுத்திறனாளிகளை கட் டாயப்படுத்துவதாக கல்வித்துறை அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ல் நடப்பதை முன்னிட்டு, தேர்தல் பணி யில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.80 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள் ளனர். இதில் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் அலுவலர்களாகப் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப் படுகின்றனர்.

அவர்களில் உடல்நிலை பாதிக் கப்பட்டோர், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும், பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட் டத்தில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் களையும் தேர்தல் பணியில் ஈடுபட வட்டாரக்கல்வி அலுவலர்கள் வற் புறுத்துவதாக ஆசிரியர்கள் புகார் தெரி வித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன் ஆகியோர் சிவகங்கை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.

இதன் விவரம்: மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோர், அறுவை சிகிச்சை செய்துகொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோருக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஏற்கெனவே மாநில தேர்தல் அதிகாரியிடம் மனுக் கொடுத் திருந்தோம். அவரும் பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட் டத்தில் உள்ள சில வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரி யர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்துகின்றனர்.

இதில் ஆட்சியர் தலை யிட்டு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்