ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பணியில் கல்வித்துறையினர் 6355 பேர் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் பணிபுரிய கல் வித்துறையைச் சேர்ந்த 6355 பேருக்கு அனுமதிக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளில் தேர்தல் மனு தாக் கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என பணிகளில் வரு வாய்த்துறை, கல்வித்துறை என 9 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். கரோ னா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக தேர்தல் பணியில் ஒரு இடத்துக்கு 3 பேர் வரை தேர்வு செய்யப்படும் நிலையும் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல் வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் 6355 பேர் வரை ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கான உத்தரவு தேர் தல் நடத்தும் அலுவலர்களால் அளிக் கப்பட்டு, நேற்று கல்வித்துறை அதி காரிகள் மூலம் வழங்கப்பட்டது.

ஆசிரியைகளுக்கு சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரி யைகள் தங்கள் வசிக்கும் பகுதியிலேயே பணிகளை ஒதுக்கக்கோரி வருகின்றனர்.

அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்காக இணையதளத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE