முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொட ங்குகிறது. தேர்தலை முன்னிட்டு இத்திருவிழா 5 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குகிறது.
தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பங்குனித் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடக்கும். அதன்படி மார்ச் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி ஏப்.7-ம் தேதி வரை நடைபெற வேண்டும்.
ஆனால் ஏப்.6-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடப்பதால் திருவி ழாவை முன்கூட்டியே நடத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி அறிவு றுத்தினார். இதையடுத்து மார்ச் 23-ம் தேதி கொடியேற்றுடன் திருவிழா தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைபவம் மார்ச் 30-ம் தேதி நடக்கிறது. மார்ச் 31-ம் தேதி இரவு 7.25 மணிக்கு மின் தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நடக்கிறது. ஏப்.1-ம் தேதி காலை பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, ஆயிரம் கண் பானை, அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செலுத்துவர். இரவு 10.30 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கும்.
ஏப்.2-ம் தேதி இரவு 7.35 மணிக்கு தீர்த் தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கோயில் பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago