சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேத மடைந்தன.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் மையத்துக்கு ராஜகம்பீரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வருகின்றனர்.
கட்டிட வசதி இல்லாததால் அதிகாரிகளால் கொள்முதல் செய் யப்பட்ட நெல் மூட்டைகளும், விவ சாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளும் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பெய்த மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின.
இதுகுறித்து விவசாயிகள் கூறி யதாவது: நெல் கொள்முதல் நிலை யங்களை திறக்க வலியுறுத்தி 3 மாதங்களாகப் போராடி வந்தோம். சில தினங்களுக்கு முன்புதான் கொள்முதல் நிலையத்தை திறந்தனர். தாமதமாக திறந்ததால் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் அடுக்கி வைத்திருந் தோம். தற்போது பெய்த மழையால் அடுக்கி வைத்திருந்த நெல்மூட்டைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
சிலரது நெல் மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் நெல் மூட்டைகளையும் முழுமையாக காய்ந் தால் மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்வர். நெல்மணிகள் காய்வதற்கே ஒரு வாரம் ஆகும். அதிகாரிகள் மெத்தனத்தால் எங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகள் கொள்முதல் செய்த நெல்மூட்டைகளையும் பரா மரிப்பின்றி வைத்ததால், அவைகளும் சேதமடைந்துள்ளன. அதிகாரிகளிடம் கேட்டால் தார்ப்பாய் இல்லை என்கின்றனர், என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago