சிவகங்கையில் பங்குனி உத்திர திருவிழா :

By செய்திப்பிரிவு

சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயி லில் உள்ள சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திரத் திருவிழா வருகிற மார்ச் 18-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.

இதையொட்டி, மார்ச் 19-ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் ரிஷப, மயில், யானை, குதிரை, உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் இரவில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மார்ச் 26-ம் தேதி மாலை 5.30 மணிக்குமேல் சுவாமி, அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

மார்ச் 28-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், இரவு 10 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கின்றன. பங்குனி உத்திர விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் பங்குனி உத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்