ராமநாதபுரம் மாவட்டத்தில் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி :

By செய்திப்பிரிவு

பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சாய்வுதள வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக பரமக்குடி தொகுதியில் 1,703 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருவாடானை தொகு தியில் 1,444, ராமநாதபுரம் தொகுதியில் 2,603, முதுகுளத்தூர் தொகுதியில் 2,155 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் 7,905 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி, பரமக்குடி தொகுதிக்கு பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும், திருவாடனை தொகுதிக்கு சி.கே.மங்கலம் பள்ளியிலும், ராமநா தபுரம் தொகுதிக்கு ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், முதுகுளத்தூர் தொகுதிக்கு கமுதி சத்திரிய நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்குச்சாவடி நடைமுறைகள், வாக்குச்சாவடி அலுவலர்களின் பொறுப்புகள், வாக் குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு தொடங்கும் முன் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சான்றொப்பம் இடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், ராமநாதபுரம் இன் பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதற்கட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வை யிட்டார். இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு கட்ட பயிற்சி என மொத்தம் மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வின் போது, ராமநாதபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்