கண்டதேவி கோவில் கும்பாபிஷேகத் திற்கு ஊராட்சி நிதி செலவிடப்பட்டது தொடர்பான வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை கண்டதேவி சிறுவத் தூரைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கண்டதேவி ஊராட்சியில் 2011 முதல் 2016 வரை ஊராட்சித் தலை வராக இருந்த முருகன் பல்வேறு முறை கேடுகளை செய்தார். இவர் ஊராட்சி நிதி ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 67-ஐ 2012 பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கும் பாபிஷேகத்துக்கு செலவு செய்ததாக கணக்கு எழுதி வைத்துள்ளார். இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஊராட்சி நிதி முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ். எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago