அரியக்குடி அரசு பள்ளிகணினி ஆய்வகத்தைசீரமைத்த ரோட்டரி சங்கம் :

By செய்திப்பிரிவு

காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் உள்ள கணினி ஆய்வகத்தின் தரைத்தளம் உடைந்து பழுதடைந்து இருந்தது.

இதையடுத்து அதனை சீரமைத்து தரும்படி காரைக்குடி ரோட்டரி சங் கத்துக்கு பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையேற்று 450 சதுர அடியில் தரைத்தளம் புதிதாக ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டது.

இதனை அச்சங்கத்தின் ஆளுநர் முருகானந்தம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி ஹெரிட் டேஜ் தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் சேவியர், சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரி யர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்