முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ் திமுகவில் இணைந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் என். சதன்பிரபாகர் தெரிவித்தார்.
பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் 2-வது முறையாக என். சதன் பிரபாகர் போட்டியிடுகிறார். இவர் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தி தனது பிரச்சாரத்தைத் தொடங் கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பரமகுடி தொகுதியில் கரோனா பரவல் காலத்தில் கட்சிப் பாகுபாடின்றி பொதுமக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் காய்கறிகள் உள்ளிட்ட உதவி களை வழங்கி உள்ளேன்.
பரமக்குடியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சுந்தரராஜ் திமுகவில் இணைந்தாலும், அவர் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார். பரமக்குடி மக்களும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சுந்தரராஜ் திமுகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு பாதிப் பில்லை என்றார்.
அதிமுக கமுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. காளிமுத்து, மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் சின் னாண்டுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago