கோடையில் நம் உடலைக்குளிர்விக்க... :

By செய்திப்பிரிவு

கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் நம் உடலை பேண சில நுணுக்கங்களைத் தருகிறார் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவின் சித்த மருத்துவ அலுவலர் எம்.எம்.அர்ஜூனன்.

கோடை காலத்தில் வியர்வைத் துர்நாற்றம் அதிகம் வராமல் இருக்க வெந்தய பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். உடலும் குளிர்ச்சியாக இருக்கும்; முடி வளர்ச்சியும் இருக்கும்.

உடல் சூட்டைத் தணிக்க அவ்வப்போது இளநீர் அருந்தலாம். குளிர்சாதன பெட்டித் தண்ணீரை குடிக்காமல் பானை தண்ணீரில் நன்னாரி வேர் போட்டு குடித்து வந்தால் வாசனையாகவும், உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

கோடை காலத்தில் உப்பு, புளி, காரத்தை சற்றே குறைத்துக் கொண்டால் உடல் சூடு ஆகாமல் இருக்கும்.

மதியத்தில் நீர் பெருக்கி மோரை உணவில் கூடுதலாக சேர்த்து, அதனுடன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்,

மொந்தன் பழம், பூவன் பழம் உள்ளிட்ட கிடைக்கும் கனிகளை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும். சமைத்த உணவுடன் கனிகளைச் சேர்த்து உண்ண வேண்டாம்.

காலை குளியல் உடலுக்கு, கண்களுக்கு குளிர்ச்சி தரும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் உடல் அசதியைப் போக்கி, உடல் வனப்பைத் தரும்.

கோடை காலத்தில் வயிற்று கடுப்பு வரும்போது, விளக்கெண்ணெய்யை அடிவயிற்றில் தேய்த்தால் வலி குறைந்து, சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்