போடி நாகலாபுரம் அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தில் சேதுபதி மறவர் அகஸ்தியர் குல கோத்திரத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பாமா ருக்மணி சமேதர கள்ளழகர் சுவாமி கோயில் உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் மண்சுவர் மற்றும் கூரையால் வேயப்பட்ட நிலையில் வழிபாடு நடந்து வந்தது. இந்நிலையில் இதனை புனரமைக்கும் பணி தொடங்கியது. நிர்வாக கமிட்டி தலைவர் தர்மராஜ் தலைமையில் இதற்கான பணிகள் நடந்தது.
தேனி வெங்கடேஸ்வரா சிற்பக்கலை கூட ஸ்தபதி செல்வம் சிலைகளையும், கோபுர சிற்பங்களை ஈஸ்வரன் ஆகியோர் வடிவமைத்திருந்தனர். கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் சிலைகள் வேத மந்திரங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின. இதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தைத் தொடங்கினர். தொடர்ந்து மகா கணபதி, சீலைக்காரி அம்மன், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி, நவகிரகங்கள், கருடாழ்வார், துவாரபாலகர்கள் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. யாக கால பூஜைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கப்பட்டன. கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பாமா ருக்மணி சமேத கள்ளழகர் சுவாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டனர். கும்பாபிஷேகத்தை பகவத் சாஸ்த்ர முறைப்படி நிவாச பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர் நிவாஸவரத பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடைபெற்றது
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago