உசிலம்பட்டி வேளாண் மாணவியர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் :

By செய்திப்பிரிவு

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கனிஅமுது, மெல்வின், சங்கீதா, புவனேஸ்வரி, ஆனந்தி, அனுபிரகாஷ் ஆகியோர் கிராமப்புறத் தங்கல் திட்டத்தின்கீழ் ஆண்டிபட்டி வட்டம் அழகாபுரி கிராமத்திற்கு சுற்றுப் பயணம் செய்தனர்.

அங்கு விவசாயிகளை ஒருங் கிணைத்து மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மிளகாய் செடியில் காணப்படும் இலைச்சுருட்டு எனும் வைரஸ் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த ஈக்களை வெகுவாய் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்தனர். இதன் மூலம் இயற்கையான முறையில் நோய் தொற்றைத் தடுக்கலாம் என்று விளக்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்