தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மஞ்சனூத்து, அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் ஐந்தரை புலி, குழிக்காடு உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விளைநிலங்களில் டீசல் மோட்டார்களை அகற்றுவதற்காக மாவட்ட வன உயிரின துணை காப்பாளர் ரவிக்குமார் தலைமையிலான வனத் துறையினர் நேற்று சென்றனர்.
இதை அறிந்த மலைக் கிராம மக்கள் மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேகமலை ஊராட்சி மன்றத் தலைவர் பால்கண்ணன் வனத்துறையினரிடம் பேசுகையில், பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். டீசல் மோட்டார்களை அகற்றினால் வாழ்வா தாரம் பாதிக்கப்படும். மாற்று ஏற்பாடு செய்த பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பின்பு இருதரப்பினரும் கிளம்பிச் சென்றனர். பின்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், இணைச் செயலாளர் சங்கரசுப்பு, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தீர்ப்பு வரும் வரை இதுபோன்ற நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago