கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கொடைக்கானல் கிராமங்களில் நூறு ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது. இருப்பினும் கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம், சேமிப்புக் கிடங்கு இல்லை. இதனால் மழைக்காலங்களில் மலைப் பூண்டு சேதமடைந்து வருகிறது. எனவே கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்கவும், பூண்டு பாதுகாப்புக் கிடங்கு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந் தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்குவந்தது. பின்னர் கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து மார்ச் 15-க்குள் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago