ண்டுக்கல் மண்டலத்தில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக் குண்டு போக்குவரத்துக்கழக கிளையில் பணிபுரியும் கிளை மேலாளார், ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 45 வயதிற்கு மேற்பட்ட 30 தொழிலாளர்களுக்கு, வத்தலகுண்டு கிளை மேலாளர் நாகபாரதி முன்னிலையில், விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது. விருவீடு அரசு ஆரம்ப சுகாதாரநிலைய டாக்டர்கள் காத்துராஜன், கமல் ஆகியோர் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினர்.,
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மண்டல பொதுமேலாளர் கணேசன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago