மயிலாடும்பாறை பகுதியில் விவசாயத் திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறுகிய மற்றும் அவசர பொருளாதாரத் தேவைகளுக்கு கைகொடுப்பதால் இப்பகுதியில் பலரும் ஆடு வளர்ப்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும் இவற்றை நேரடியாக விற்பதில் விவசாயிகளுக்கு பல்வேறு நடைமுறை சிரமங்கள் ஏற்படு கின்றன. தேனி, ஆண்டிபட்டி போன்ற சந்தைகளுக்கு ஆடுகளை கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. வியாபாரிகள் இங்கு வந்து வாங்கினாலும் குறைவான விலைக்கே கேட்கின்றனர். எனவே இப்பகுதியில் கால்நடை வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை வளர்ப்போர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பொன்னன்படுகை சாலையில் இடத்தை தேர்வு செய்தனர். தற்போது இந்த இடம் செப்பனிடப்பட்டு சந்தை கூடுவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரச்சந்தை கூடும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago