மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் - மாசித் திருவிழா வரும் 11-ம் தேதி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ரசித்தி பெற்ற தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா வரும் 11-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ளது.

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மூங்கி லணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் மஞ்சளாறு நதிக்கரையோரம் உள்ள இக்கோயிலில் அம்மனுக்கு சிலை கிடையாது. மேற்கூரை வேயப்பட்டு கோயில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்த கதவிற்கே மூன்று கால பூஜையும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கதவுக்கோயில் என்றும் அழைக்கின்றனர்.

24 மணி நேரமும் அணையாத நெய்விளக்கு சுடர் விட்டுக்கொண்டிருக்கும். தங்களின் குலதெய்வம் அறியாதவர்கள் இந்த காமாட்சி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தினமும் மாலை 6 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க சாயரட்சை பூஜை நடைபெறும். இதில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம். இக்கோயில் திருவிழா மாசி சிவராத்திரியில் தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 18-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இதற்காக பெரியகுளம், தேனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சந்திரசேகரன் செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்