தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் விளையும் தேங்காய்கள் தேனி, சின்னமனூர், ஆண்டிபட்டி, கம்பம், மதுரை,உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது ஆந்திரா, கர்நாடகாஉள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் வரத்து உள்ளது, இதனால் தமிழக தேங்காய்களின் விலை குறைந்து வருகிறதுவிவசாயிகள் கூறுகையில், வெளிமாநில காய்களின் வரத்தினால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை கட்டுப்படி ஆகாததால் காங்கேயம், திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு கொப்பரைத் தேங்காய்க்காக அனுப்பி வைக்கிறோம். ஒரு டன்னுக்கு ரூபாய் ரூ.31 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. தென்னை நலவாரியம் தேங்காய் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்த வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago