கேரளாவில் இருந்து திருப்பத்தூர் பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு 65 வயது முதியவர் ஒருவர் வந்தார். அதில் இருந்து யாரிடமும் அவர் பேசியதில்லை.
யார் அருகில் சென்றாலும் சலனமின்றி இருப்பார். மேலும் அவர் தேக்கு இலையை பயன்படுத்தியே உணவு உட்கொள்வார். இதற்காக அவர் திருப்பத்தூர், புதுப்பட்டி, காளியம்மன் கோயில் தெரு, புதுத்தெரு பகுதிகளில் உள்ள தேக்கு மர இலைகளைப் பறித்து, திருப்பத்தூரில் உள்ள சில கடைகளில் மட்டுமே உணவு வாங்கி சாப்பிடுவார். பணம், பரிசு பொருட்கள் எதுவும் வாங்க மாட்டார்.
மேலும் சடை முடியுடன் அவர் இருந்ததாலும், தேக்கு இலையில் மட்டுமே சாப்பிட்டதாலும் அவரை தேக்கிலைச் சித்தர் என்றே அழைத்தனர். கடந்த 2 நாட்களாக வணிக வளாகத்தில் படுத்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலமானார். இதுபற்றி தகவல் அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.
போலீஸார் விசாரணைக்குப் பிறகு அவரது உடல் கண்டவராயன்பட்டி அருகே தனியார் தோப்பில் சித்தர்கள் அடக்கம் செய்வதை போன்று திருநீறு, தேக்கு இலையால் நிரப்பப்பட்டு அமர்ந்த நிலையில் நல்லடக்கம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago