காரைக்குடி-திருச்சி பயணிகள் ரயில் மார்ச் 15 முதல் மீண்டும் இயக்கம் :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்குக்குப் பிறகு காரைக்குடி -திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 20 பயணிகள் ரயில்கள் வரும் மார்ச் 15-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வரும் பயணிகள் ரயில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.05 மணிக்கு காரைக்குடிக்கு வந்து சேரும்.

அதேபோல், காலை 7 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு காலை 9.05 மணிக்கு திருச்சிக்கு போய் சேரும். முன்பதிவு இல்லை. ஆனால், பயணிகள் கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடி -திருச்சிக்கு ரூ.50, புதுக்கோட்டைக்கு ரூ.30. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது,

இதனைத் தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் வரவேற்று உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்