இளையான்குடியில் மாணவர்களுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இளையான்குடியில் தேர்தல் ஆயத்தப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பிறகு இளையான்குடி ஜாகிர் உசேன் கலைக் கல்லூரியில் மாதிரி வாக்குப்பதிவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது என உறுதிமொழி ஏற்றனர். மேலும் 100 அடி நீளமுள்ள பதாகையில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஆனந்த், துணை வட்டாட்சியர்கள் இளங்கோ, முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்