சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை நீதிமன்றம் அருகே கடந்த ஜன. 9-ம் தேதி மானாமதுரையைச் சேர்ந்த அருண்நாதன் (27), காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த வினோத்கண்ணன் (30) ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அருண்நாதன் இறந்தார். வினோத்கண்ணன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19) உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த அக்னிராஜ், மானாமதுரை காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியேறியவரை, மற்றொரு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கடந்த ஜனவரியில் நடந்த சம்பவத்துக்காக வினோத்கண்ணா தரப்பைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழியாக இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய மானாமதுரை உடைகுளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தர்மராஜ், விக்னேஸ்வரன், திருப்பாச்சேத்தி அருகே தாலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பூச்சிஇருளப்பன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago