காரைக்குடியில் 35-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகங்கை மாவட்டக் கிளை, மதுரை நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை சார்பில், இந்த புத்தகக் கண்காட்சி வருகிற 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்துத் தொடங்கி வைத் தார். அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் புதிய நூல்களை அறிமுகப்படுத்தி பேசினார். நூல்களின் முதல் விற்பனையை அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் கா. மணிமேகலை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பேராசிரியர் என். ஜானகிராமன், சுழற்சங்க மாவட்டத் துணை ஆளுநர்கள் எம். சண்முகம், சுப. நாகநாதன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஆர். சேதுராமன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றச் செயலாளர் கரு. முருகன் ஆகியோர் புதிய நூல்களின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளா் அ. கிருஷ்ணமூா்த்தி, கிளை மேலாளா் கு. பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றக் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago