காரைக்குடியில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிலம்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கழனிவாசல் சந்தை ஆகிய பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தோணிராஜ் தொடங்கி வைத்தார். மண்டலத் துணை வட்டாட்சியர் மல்லிகார்ஜூன், வருவாய் ஆய்வாளர் மெகர் அலி, கிராம நிர்வாக அலுவலர் அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி கழனிவாசல் நேதாஜி சிலம்பாட்டக் குழுவில் பயிலும் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago