சிவகங்கையில் மீண்டும் - ஜி.பாஸ்கரன் போட்டியிட வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரையில் அதிமுக வேட்பாளர் போட்டியிட உள்ளதாகவும், மேலும் சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின் றது. இதனால் 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட்டனர். இதில் சிவகங்கை, மானாமதுரையை அதிமுக கைப்பற்றியது. காரைக்குடியில் காங்கி ரஸ் வேட்பாளரும், திருப்பத்தூரில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனும் வெற்றி பெற்றனர்.

இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியில் பாஜக, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரையில் அதிமுக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப் படுகிறது.

அதன்படி அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் திருப்பத்தூரில் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரையில் சிட்டிங் எம்எல்ஏ நாகராஜன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்