நன்றாக செயல்பட்டு வந்த - சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையை மூடி விட்டனர் : திமுக நகரச் செயலாளர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

‘‘நன்றாகச் செயல்பட்டுவந்த சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையை மூடி விட்டனர்,’’ என திமுக சார்பில் சிவகங்கையில் நடந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டத்தில் நகரச் செயலாளர் துரைஆனந்த் பேசினார்.

சிவகங்கையில் நடந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டத்துக்கு திமுக நகரச் செயலாளர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துரை ஆனந்த் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 85 ஆயிரம் பேர், பல ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சத்துணவு அமைப் பாளர், சமையலர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.

அப்பணிக்கு நேர்காணல் முடிந்தும் ஆளும்கட்சியினரின் தலையீட்டால் சத்து ணவுப் பணியாளர் காலியிடங்களை நிரப்பவில்லை. அதேபோல் சிவ கங்கை மாவட்டத்தில் கால்நடை உதவி யாளர் காலியிடங்களையும் நிரப்ப முடியவில்லை. நன்றாகச் செயல்பட்ட கிராபைட் தொழிற்சாலையை மூடிவிட் டனர். இதற்கு அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம்.

மகளிர் குழுக்களுக்கு வழங்கிய கடனுக்கு கரோனா காலத்தில் கூட வட்டியைத் தள்ளுபடி செய்யவில்லை. வங்கி அதிகாரிகள் கெடுபிடியாக வசூலித்தனர். தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மகளிர் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மகளிர் குழுவினரிடம் திமுகவினர் மனுக்களை பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்