பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா :

By செய்திப்பிரிவு

பரமக்குடியில் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

பரமக்குடி ஆயிரவைசிய சபை, முத்தாலம்மன் கோயில் தேவஸ்தானம் ஆகியவை சார்பில் முத்தால பரமேஸ்வரி அம்மன் பூச்சொரிதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை பரமக்குடி நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தியும், வாகனங்களில் அம்மன் சிலைகளுடன் மேள, தாளத்துடன் கோயிலுக்கு வந்தனர். காலை 6 மணி அளவில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் பக்தர்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்