ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்பி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட நயினார் கோவில், வேதாளை, கீராந்தை (சிக்கல்), பெருங்கரனை, அடுத்தகுடி (திருவாடானை), மண்டலமாணிக்கம் (கமுதி) உள்ளிட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவை மீறி மணல் குவாரிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதில் நேரடி கவனம் கொண்டு நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்ட குவாரிகளை அகற்றி, மணல் கடத்தலைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சட்டவிரோதச் செயல்கள் தொடராமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாற அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago