விழுப்புரம் மாவட்டத்தில் 2,368 வாக்குச்சாவடிகள் அமைப்பு50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைவிழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்(தனி), திண்டிவனம் (தனி), மயிலம், செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 8,33,206 ஆண் வாக்காளர்களும், 8,51,082 பெண் வாக்காளர்களும், 216 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,84,504 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 2,368 வாக்குச்சாவடிகள் அமைப்பு

50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்(தனி), திண்டிவனம் (தனி), மயிலம், செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 8,33,206 ஆண் வாக்காளர்களும், 8,51,082 பெண் வாக்காளர்களும், 216 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,84,504 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1,050 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு1,957 முதன்மை வாக்குச்சாவடிகளும், 411 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.11,366 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2368 வாக்குச்சாவடிகள் 179 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள், 33 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. தொகுதிக்கு 3 பறக்கும்படை வீதம் 7 தொகுதிகளுக்கு 21 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையில் 4 அதிகாரிகள் இருப்பார்கள். சோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். அவர்களின் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்படும். வேட்பாளராகவே இருந்தாலும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் 22,469, 80 வயதை கடந்த முதியவர்கள் 33,949 என 56,418 வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்கு முறையும், ஆன் லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் முறையும் இத்தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுவிதா போர்டல் மூலம் அஞ்சல் வாக்குகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்குரிமை இல்லாதவர்கள் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் வழக்கம் போல விண்ணப்பிக்கலாம். சியூஜி ஆப், இலவச தொலைபேசி எண் 1950 மூலம் பொதுமக்கள் தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

முன்னதாக நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

வேட்புமனு தாக்கலின்போது, இரண்டு பேர் மட்டுமே வர வேண்டும். கடந்த தேர்தலில் ஐந்து பேருக்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வேட்பாளரை சேர்த்து இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல் வாகனங்கள் மூன்றிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்