கொய்யா இலையின் மகத்துவம் தெரியுமா

By செய்திப்பிரிவு

கொய்யா இலையின்

மகத்துவம் தெரியுமா..!

க.ரமேஷ்

‘கொய்யா பழத்தில் கோடி நன்மைகள் உண்டு’ இது மருத்துவ முதுமொழி. நம்மில் சிலருக்கு இது தெரியும். அவர்களிலும் வெகு சிலருக்கே தெரியும் கொய்யா இலையிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பது.

அதுபற்றிச் சொல்கிறார் சிதம்பரம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவின் மருத்துவ அலுவலர் எம்.எம். அர்ஜூனன்.

“ கொய்யாவில் வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் காட்டு கொய்யா என்று வகைகள் உண்டு. அனைத்து வகைகளிலும் நிறைந்த மருத்துவக் குணம் உள்ளது. முக்கியமாக சிவப்பு மற்றும் கருப்பு கொய்யாக்கள் சிறப்பானது. கொய்யா இலைகளில் ‘ஆல்பா-குளுக்கோசிடேஸ்’ அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால், நீரிழிவு நோயைத் தடுப்பதில் கொய்யா இலைகள் பெரும் பங்காற்றுகின்றன.

ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதால், நீரிழிவைத் தொடர்ந்து வரும் இதய கோளாறும் கட்டுப்படுகிறது. மாதவிடாயின் வலி அறிகுறிகளைப் போக்க உதவுகிறது, செரிமான மண்டல நொதிகளின் உற்பத்திக்கு உறுதுணை செய்கிறது. கெட்டக் கொழுப்பை கரைக்கும்; எடை இழப்புக்கு உதவும், புற்று நோய்க்கு எதிராக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்திற்கு நல்லது.

சளி மற்றும் இருமலையும் கூட குறிப்பிட்ட அளவில் குணப்படுத்தும், முடி உதிர்தலைத் தடுக்கும், பல் வலியை குறைக்கும், நல்ல தூக்கத்தை தரும், மூளைக்கு நல்லது. மொத்தத்தில் கொய்யா இலை கசாயத்தில் கொட்டி கிடக்கிறது மருத்துவக் குணங்கள்” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்