சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்து புகார் செய்ய தேர்தல் கட்டுப்பாட்டு அறை உடனடியாக அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா முன்னிலை வகித்தார். தேர்தல் தொடர்பான விதிமுறைகளை அதிகாரிகள் முறையாக பின்பற்ற எடுத்துக் கூறப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா என கண்காணிக்க, பறக்கும்படை உள்ளிட்டவற்றை அமைத்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்கூட்டம், கிராமப்புறங்களில் மாதந்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவை தேர்தலுக்கு பின்னரே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதுவரை பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களாக இடலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என தெரிவிக்கப்பட்டது..
தேர்தல் விதிமுறைகள் உடனடி யாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 0451-2460505, 0451-2460506, 0451-2460507, 0451-2460508 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago