போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள போலீஸ் ஆலோசனை கூட்டம்

By செய்திப்பிரிவு

தமிழக கேரள எல்லையில் உள்ள மதுக் கடைகளில் மொத்தமாக மதுவிற்பனை செய்யக் கூடாது. ஒரு கடையில் ஒரு நாளைக்கு 30 சதவீதத்திற்கு மேல் மது விற்பனை இருந்தால் அவற்றை கண்காணிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டமாக தேனி அமைந்துள்ளது.அருகில் கேரளாவை இணைக்கும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட வழித்தடங்களும்,தேவாரம், குரங்கணி, பண்ணைப்புரம்,பளியன்குடி, மூங்கில்பள்ளம், சின்னாறு உள்ளிட்ட பல்வேறு வனப்பாதைகளும் அமைந்துள்ளன.

இதனால் தீபாவளி, ஓணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் மற்றும் தேர்தல் காலங்களில் போதைப் பொருள், பணப்பரிமாற்றம் அதிகளவில் நடை பெறும்.

இதற்கு முன்னதாக இருமாவட்ட அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். இரண்டு மாதத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கம்பம் நகராட்சியில் இருமாவட்ட காவல் மற்றும் கலால்துறை அதிகாரிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆலோசிக்கப்பட்ட விபரங்கள்: இருமாநில சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்தி கள்ளச்சாராயம், கஞ்சா, பணப்புழக்கம் உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும். இருமாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் அதிகளவில் மதுக்களை விற்பனை செய்யக் கூடாது. ஒரு கடையில் ஒருநாளைக்கு 30 சதவீதத்திற்கு மேல் மது விற்பனை இருந்தால் குழு மூலம் கண்காணிக்க வேண்டும். மதுக்கடைகளில் நிர்ண யிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் விற்பனையில் ஈடுபடுவது, பிரசாரத்திற்கு அனுமதி பெற்ற வாகனங்கள் அந்தந்த தொகுதிகளின் எல்லை தாண்டாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கருத் துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தேனி மாவட்ட கலால்துறை உதவி ஆணையர் விஜயா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், இடுக்கி மாவட்ட கலால்துறை இணை ஆணையர் பிரதீப், உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு, டாஸ்மாக் மேலாளர் மீனாட்சி, மாவட்ட உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்