படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க ரூ.7.41 கோடி மானியத்துடன் ரூ.29.66 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தேனி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இல.ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பலனடைந்த நிறுவன செயல்பாடு குறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இல.ராமசுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார்.
பின்பு அவர் கூறுகையில் தமிழக தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2011-12-ம் நிதியாண்டு முதல் 2015-16-ம் நிதியாண்டு வரை 32 இளைஞர்களுக்கு 0.82 கோடி மானி யத்துடன் ரூ.3.27 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் 2016-17-ம் ஆண்டு நிதியாண்டு முதல் 2020-21-ம் ஆண்டு நிதியாண்டு வரை 66 இளைஞர்களுக்கு ரூ.3.02 கோடி மானியத்துடன் கூடிய ரூ.12.10 கோடி கடனுதவியும் என மொத்தம் 98 இளைஞர்களுக்கு ரூ.3.84 கோடி மானியத்துடன் கூடிய ரூ.15.37 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தித் தொழில் தொடங்க முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 983 இளைஞர்களுக்கு ரூ.7.41 கோடி மானியத்துடன் ரூ.29.66 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அ.தாண்டவன் உள்ளிட்டோர் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago