தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் தென்னை நார் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

By செய்திப்பிரிவு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தென்னை நார் மற்றும் அதுசார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு தலைமை வகிக்க, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் எம்.அறிவழகன் வரவேற்றார். முதல்வர் சி.மதளைசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், எழுத்தாளர் ஈரோடு கதிர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

சென்னை ஐடிசிஓடி திட்ட அதிகாரி சிவக்குமார் கலந்து கொண்டு தென்னை நார், அது சார்ந்த பொருட்கள் தயாரிப்பது, ஏற்றுமதி, தொழில்துறை வாய்ப்புகள், மானியம், அரசு திட்டம் குறித்து விளக்கினார்.

தேனி மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் எல்.ராமசுப்பிரமணியன், தென்னை நார் பொள்ளாச்சி மண்டல அலுவலர் ஜி.பூபாலன் வாழ்த்துரை வழங்கினர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜ்மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், துணை முதல்வர் என்.மாதவன், கல்லூரி பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்