காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் 62 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற உள்ளதால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

By செய்திப்பிரிவு

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் 62 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற உள்ளதால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1958-ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன்பிறகு திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப் போவதாக முதல்வர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக ரூ.700 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது:

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்தினால் வறட்சியை தடுக்கலாம். கடந்த காலங்களை போல் அறிவிப்போடு போகாமல், மத்திய அரசு நிதி உதவி அளித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். நீர் பங்கீட்டு முறையையும் வரையறுக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்