தேவகோட்டை அரசு மருத்துவ மனையில் பகலில் கூட மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேவகோட்டை அரசு மருத்து வமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 12 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 6 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் மகப்பேறு மருத்துவர் மாற்றுப் பணியாக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வந்து செல்கிறார். செவிலியர்களும் போதிய எண் ணிக்கையில் இல்லை.
காலையில் புறநோயாளிகள் பிரிவு பணி முடிந்ததும், ஒரு மருத்துவராவது பணியில் இருக்க வேண்டும். ஆனால் யாரும் இருப்பதில்லை. பகலிலேயே மருத்துவர்கள் இருப்பதில்லை. இதுகுறித்து மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறுகையில், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago