பலநூறு கோடி பேர் பயன்படுத்தும் இணையத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கு மட்டும் 10 லட்சம் இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் தேவைப்படுவர் என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா.ராஜேந்திரன் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழகத்தின் அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் இக்க ல்வியாண்டு முதல் இணையப் பாதுகாப்பு நிறுவனங்களின் தொழில் துறை ஒத்துழைப்புடன் முது கலை இணைய பாதுகாப்புப் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஹிபிசெக் தொழில்நுட்ப நிறுவ னத்துக்கும் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதால் இணையப் பாது காப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு மையம் அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் அமைக் கப்பட்டுள்ளது.
இதை துணைவேந்தா் நா. ராஜேந்திரன் திறந்துவைத்துப் பேசியதாவது:
பல நூறுகோடி பேர் பயன்படுத்தும் இணையத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. நிறுவனங்கள் மட்டுமன்றி தனி நபா்களின் அறிவுசார் சொத்துகளும் திருடப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு இந்தியாவுக்கு மட்டும் வரும் ஆண்டுகளில் 1 மில்லியன் இணையப் பாதுகாப்பு வல்லுநா்கள் தேவைப்படுவர் என நாஸ்காம் தெரிவித்திருக்கிறது.
மேலும் வேலைவாய்ப்பு இணைய தளங்கள், இணையப் பாதுகாப்புக்கான வேலையிடங்கள் 150 சதவீதம் அதி கரித்துள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் ஹிபிசெக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூலம் கல்வி மற்றும் தொழில்களுக்கான திறன் பயிற்சி, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. அழகப்பா திறன் மேம்பாட்டு நிறு வனம் இந்தக் கல்வியாண்டு முதல் இணைய பாதுகாப்பு நிறுவனங்களின் தொழில்துறை ஒத்துழைப்புடன் முது கலை இணைய பாதுகாப்புப் பட்டயப் படிப்பை தொடங்கியிருக்கிறது. இவ் வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணைவேந்தா் முன்னிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர் பா.வசீகரன், சென்னை ஹிபிசெக் நிறுவனத் தலைவா் சுரேஷ் ஆகியோர் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் பூ.தர்மலிங்கம், அழகப்பா பல்கலை. மேலாண்மைபுல முதன்மையர் மு.செந்தில், துறைத் தலைவர்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago