வகாசியில் வெடிவிபத்துகளை தடுக்க பட்டாசு தொழிற்சாலைகளை நவீனப் படுத்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி 33-வது வார்டில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்பி கார்த்தி சிதம் பரம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகாசி பகுதியில் தொடர் வெடி விபத்துகளைத் தடுக்க தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும். உலகத் தரமிக்க பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பற்ற பழைய முறையிலேயே தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலைகளை நவீனப்படுத்தத் தேவையான சலுகைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும் பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோருக்கு அதிக தொகைக்கு காப்பீடு இருக்க வேண்டும். அதற்காக தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி தர வேண்டும்.
இந்தியா, சீனா எல்லையில் என்ன நடக்கிறது என்ற உண்மையை பிரதமர் மோடி இதுவரை சொல்லவில்லை. அத னால் உண்மை நிலையை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பெட்ரோலுக்கு மத்திய அரசு செஸ் வரி விதித்துள்ளது. மற்ற வரிகளை மாநிலத்துக்குப் பங்கிட வேண்டும். ஆனால் செஸ் வரியை பங்கிடத் தேவையில்லை. முழுமையாக மத்திய அரசே வைத்து கொள்ளலாம். மத்திய அரசு பொருளாதாரம் நடத்தும் விதத்தை பார்க்கும்போது பெட்ரோல் விலை குறைய வாய்ப்பில்லை.
வரிச்சுமையை கூட்டி கொண்டே செல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது சிறிய விலை உயர்வுக்குக் கூட ‘மாட்டு வண்டியில் போகிறோம்’ என்று போராட்டம் நடத்தினர். தற்போது பெட்ரோல் விலை ரூ.100-யை எட்டிவிட்டது.
இதனால் சாதாரண மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பேசுகிறது. ஆனால், ஊடகங்களில் இதை சரியாக வெளியிடுவதில்லை
காங்கிரஸ் கட்சி எதற்கும் அஞ்சு வதில்லை. உரக்க சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago