ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தாக்கப்படுவதை கட்டுப் படுத்தலாம் என மக்களவையில் ராம நாதபுரம் எம்.பி நவாஸ்கனி வலியுறுத் தினார்.
இதுகுறித்து பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்.பி. கே.நவாஸ்கனி பேசியதாவது: இந்த பட்ஜெட்டில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவும் விதமாக எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மதுரையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. ஆனால் அதற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கை படையால் தாக்குதலுக்குள் ளாவதைக் கட்டுப்படுத்தலாம்.
சிறுபான்மையினர் நலனுக்கு கடந்த ஆண்டு ரூ. 5029 கோடி ஒதுக்கிய அரசு, இந்த முறை ரூ.4,810 கோடி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக சிறு பான்மையினரின் கல்வி உதவித்தொகை ஆறு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago