ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு அலகாபாத் ராணுவ மையத்தில் வெண்கலச்சிலை அமைப்பு

By செய்திப்பிரிவு

எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு அலகாபாத் ராணுவப் பயிற்சி மையத்தில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் காஷ் மீர் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத் தினரிடையே நடந்த மோதலில் ராமநா தபுரம் மாவட்டம், கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வீரர் பழனி மட்டுமே.

அதனையடுத்து வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அதனையடுத்து மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர். தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமும், வீரர் பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. மேலும் வீரமரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விரு தான வீர் சக்ரா விருதையும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அலகாபாத்தில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பழனிக்கு மார்பளவு வெண்கலச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. அவரது பெயரில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு பழனியுடன் பணி புரிந்த சக ராணுவ வீரா்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்