சிங்கம்புணரி அருகே கால்நடைகளுக்கு பொங்கல் வைத்த கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஊர் ஒற்றுமைக்கான விழாவில் கால்நடைகளுக்குப் பொங்கல் வைத்து கிராமமக்கள் கொண்டாடினர்.

சிங்கம்புணரி அருகேயுள்ள உலகம்பட்டியில் ஆண்டுதோறும் தை மாதம் இறுதியில் ஊர் ஒற்றுமைக்காவும், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பொங்கல் விழா நடக்கிறது. அதன்படி உலகம்பட்டி, கண்டியாநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் நம்பையா கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

தொடர்ந்து சுவாமிக்கும், கோயில் மாட்டுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. அதன்பிறகு கோயில் பூசாரிகள் பொங்கல் வைத்ததும் மற்றவர்கள் பொங்கல் வைத்தனர். பிறகு தங்களது கால்நடைகளுக்கு தீர்த்தம் தெளித்து, அவற்றுக்கு நன்றிக்கடன் செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்